தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டது. மாதத்தின் முதல் நாள்(அக்டோபர்- 1) தங்கம் விலை சவரனுக்கு 48 அதிகரித்து ஒரு சவரன் 38,520க்கும் விற்க்கப்பட்டது. தொடர்ந்து, அடுத்த நாள் 2-ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. சவரனுக்கு 432 அதிகரித்து ஒரு சவரன் 38,952க்கும் விற்கப்பட்டது. இருப்பினும், 3-ம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,800-க்கு விற்பனையானது.

தொடர்ந்து, 5ம் தேதி ஒரு சவரன், ரூ.38,568-க்கும், 6-ம் தேதி ரூ.38,880, 7ம் தேதி ரூ.38,448, 8ம் தேதி ரூ.38,480-க்கும், 9-ம் தேதி ரூ.38,800-க்கும் விற்கப்பட்டது. 10-ம் தேதி ரூ.39,048க்கும் 12-ம் தேதி ரூ.39,096க்கும், 13-ம் தேதி ரூ.38,920-க்கும், 14-ம் தேதி ரூ.38,704-க்கும், 15-ம் தேதி ரூ.38,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் தங்கம் விலை குறைந்த நிலையில், நேற்று மீண்டும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. கிராமுக்கு 23 அதிகரித்து ஒரு கிராம் 4,853க்கும், சவரனுக்கு 184 அதிகரித்து ஒரு சவரன் 38,824க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் உயர்ந்தது.

இந்நிலையில், (அக்டோபர்- 17) இன்று தங்கம் விலை அதிரயாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.183 குறைந்து ரூ.4,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், தங்கம் விலை மீண்டும் சவரன் 38 ஆயிரத்திற்கு கீழே சென்றுள்ளது நகை பிரியர்கள் மத்தியில் ஆனந்த கண்ணீரை வர வைத்துள்ளது. வரும் நாட்களில் அதிகளவில் விசேஷ தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் விலை குறைந்து வருவது நகை வாங்க பணம் சேர்த்து வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here