சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.29,072க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

பல்வேறு காரணங்களால் தங்கம் விலை  உயர்ந்து, உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த திங்கள்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தது. 

இந்நிலையில், சென்னையில் இன்று புதன்கிழமை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.29,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,048 குறைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து, ரூ.3,634க்கு விற்பனையானகிறது. வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ரூ.51.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.