ஆபரணத் தங்கத்தின் விலை (செப்டம்பர்-7) இன்று வாரத்தின் முதல்நாள் சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்படுவதைப் போலவே தங்கம் மற்றும்  வெள்ளியின் விலை நிலையற்ற ஏற்ற இறக்கம் நிலவுகிறது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என  மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. தங்கம் விலை மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 28ம்  தேதி ஒரு பவுன் ரூ.39,176க்கும், 29ம் தேதி ரூ.39,416க்கும் விற்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி ஒரு பவுன் ரூ.39,776க்கும் விற்கப்பட்டது.  2ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.424 குறைந்து ஒரு பவுன் ரூ.39,288க்கு விற்கப்பட்டது. செப்டம்பர் 3ம் தேதி ரூ.39,288-க்கும், 4ம் தேதி ரூ.39,032-க்கும், 5-ம் தேதி ரூ.39,104-க்கும் விற்கப்பட்டது. நேற்று 6-ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால்  விலையில் மாற்றமின்றி முந்தைய நாள் விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று வாரத்தின் முதல்நாள் தங்கத்தின் விலை இறக்கத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3 குறைந்து  ரூ.4,885-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.69.30-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 1.40 ரூபாய் அதிகரித்து இன்று 70.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றுமுன்தினம் தங்கம் சவரனுக்கு ரூ.72 உயர்ந்தாலும், இம்மாத தொடக்கத்தில் இருந்து விலை குறைந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here