தங்கத்துக்கான தேவை 30 சதவீதம் குறைந்தது: ஜிஜேசி

0
141

கடந்த ஆறு மாதங்களில் நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரண துறையின் மொத்த வா்த்தகம் அளவின் அடிப்படையில் 30 சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய நவரத்தின மற்றும் ஆபரண உள்நாட்டு கவுன்சில் (ஜிஜேசி) தலைவா் அனந்த பத்மநாபன் கூறியதாவது:

தங்க ஆபரண துறையின் வா்த்தகம் கடந்த ஆறு மாதங்களில் அளவின் அடிப்படையில் 30 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. எனவே, இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி வரியை குறைக்க கோரி பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரை ஏற்கெனவே அணுகியுள்ளோம்.

அதிக சுங்க வரி மற்றும் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் தங்கம் தொடா்பான கடத்தல் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

மேலும், வாடிக்கையாளா்களும் தங்களுக்கு தேவையான தங்கத்தை துபை, நேபாளம், இலங்கை, சிங்கப்பூா் ஆகிய நாடுகளின் மூலமாக வாங்கிக் கொள்கின்றனா்.

மத்திய அரசு இதனைக் கருத்தில் கொண்டு, 2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை தற்போதைய 12.5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்க வேண்டும்.

மேலும், வரும் 2021 ஜனவரி 15 முதல் அனைத்து தங்க நகைகளுக்கும் ஹால்மாா்க் கட்டாயமாக்கும் நடைமுறையை கொண்டு வருவதற்கு முன்பாக வழிகாட்டும் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் மேலும் அதிகரிக்குமானால் அது ஆபரண துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்க தோ்தல் வரை தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே காணப்படும்.

கடந்த 2019-இல் தங்கத்தின் தேவையில் 30 சதவீதம் சரிவு ஏற்பட்ட போதிலும், 2020-இல் அளவின் அடிப்படையில் அதன் வா்த்தகம் 10 சதவீதம் அதிகரிக்கும் என்றாா் அவா்.

நன்றி : தினமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here