சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (நவ-29)வெள்ளிக்கிழமை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.29,008-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், செப்டம்பர 5-ஆம் தேதி காலையில் ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இதற்கிடையில், ஒரு பவுன் ஆபரணத்தங்கம் தங்கம் விலை கடந்த 25-ஆம் தேதி அன்று ரூ.29 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அன்றைய நாளில் ஒரு பவுன் தங்கம் ரூ.28,984 ஆக இருந்தது.அதன்பிறகு 3 நாள்களுக்கு தங்கம் விலை இறங்குமுகமாக இருந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.96 உயரந்து, ரூ.29,008-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் கிராமுக்கு ரூ.12 உயரந்து ரூ.3,626-க்கு விற்பனையானது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.47.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.47,900 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ……………….. 3,626
1 பவுன் தங்கம் ………………… 29,008
1 கிராம் வெள்ளி ……………… 47.90
1 கிலோ வெள்ளி …………….. 47,900

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ………………… 3,614
1 பவுன் தங்கம் ………………… 28,912
1 கிராம் வெள்ளி ……………… 47.90
1 கிலோ வெள்ளி ……………… 47,900.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here