தங்கத்தின் விலை – 28,500 ரூபாயை தாண்டியது

0
223

முதலீடுஅதிகரிப்பு,பொருளாதாரமந்தத்தால்சென்னையில்இன்றுதங்கத்தின்விலைசவரனுக்குரூ.192 உயர்ந்து, ஒருசவரன்ரூ.28,568-க்குவிற்பனையாகிறது.

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை மெல்ல மெல்ல அதிகரித்தபடி இருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 3,021 ஆக இருந்தது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 168க்கு விற்பனை ஆனது.

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக சர்வதேச பொருளாதார நிலை திருப்தியாக இல்லை. தொடர்ந்து பல நாடுகளில் பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் தங்கத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த இயலவில்லை.

இந்தியாவில் ரூபாய் மதிப்பின் தாக்கம்தான் தங்கம் விலையை நிர்ணயம் செய்வதாக இருக்கும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போதெல்லாம் தங்கம் விலை அதிகரிக்கும்.

கடந்த சில தினங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 22 கேரட் தங்கம் விலை தினமும் அதிகளவு உயர்கிறது.

இதற்கிடையே தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடு உலக அளவிலும், இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. ரஷியா, சீனாவில் தங்கத்தின் முதலீடு மிக அதிகளவு உள்ளது.

சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி 12 சதவீதமாக உயர்ந்தது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகி விட்டது.

கடந்த 2-ந்தேதி தங்கத்தின் விலை மிக கடுமையாக உயர்ந்தது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ. 27,064 ஆக இருந்தது. 3, 4-ந்தேதிகளில் பவுன் விலை ரூ.27,328 ஆக இருந்தது. 5-ந்தேதி அது ரூ.27,680 ஆக உயர்ந்தது.

நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.27,784 ஆக அதிகரித்தது. நேற்று தங்கம் விலை ரூ.28 ஆயிரத்தை கடந்தது. நேற்று கடைகளில் ஒரு பவுன் தங்கம் ரூ.28,352 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) தங்கம் விலை ரூ.29 ஆயிரத்தை நெருங்கும் வகையில் உயர்ந்துள்ளது. இன்று கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,571 ஆக இருந்தது.

இதனால் ஒரு பவுனுக்கு ரூ.192 அதிகரித்தது. இன்று சென்னை நகை கடைகளில் 22 கேரட் நகைகள் ரூ.28,568 ஆக விற்பனை ஆனது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று விற்பனையாளர்கள் கருதுகிறார்கள்.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1.10 அதிகரித்து ரூ.47.90 ஆக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here