தங்கத்தின் விலை ரூ.39,232 ஆக உயர்வு

0
119

உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயும் கொரோனா தாண்டவம் அதிகரித்து வருகிறது. நாட்டில் பொருளாதாரமே நிலைகுலைந்து இருக்கும் சூழ்நிலையிலும் தங்கம்  விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுவும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் முதல் இந்த விலை உயர்வு என்பது அதிகமாக இருந்து வருகிறது. இது திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சிறுக, சிறுக பணம் சேர்த்து  நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ37,616க்கு விற்றது. தொடர்ந்து 21ம் தேதி சவரன் ரூ37,736க்கும், 22ம் தேதி ரூ38,184க்கும் விற்பனையானது.

(ஜூலை-23) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, கிராமுக்கு ரூ74 அதிகரித்து கிராம் ரூ4,847க்கும், சவரனுக்கு ரூ592 அதிகரித்து ரூ38,776க்கும் விற்கப்பட்டது. இந்த வாரமே தங்கம் விலை 39 ஆயிரத்தை கடக்கும் என்று நகை வியாபாரிகள்  கூறி வந்தனர். ஆனால், (ஜூலை-24) நேற்று தங்கம் விலை மேலும் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, கிராமுக்கு ரூ38 அதிகரித்து ஒரு கிராம் ரூ4,885க்கும், சவரனுக்கு ரூ304 அதிகரித்து ஒரு சவரன் ரூ39,080க்கும் விற்கப்பட்டது.
இந்த விலை உயர்வு தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். நேற்று காலையில் தங்கம் விலை சவரன் ரூ39,032க்கு விற்கப்பட்டது. இது மாலையில் மேலும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், (ஜூலை-25)இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.19 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,904-ஆக விற்பனையாகியது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,232-க்கு விற்பனை  செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை 39 ஆயிரத்தை கடந்துள்ளது நகை வாங்குவோர் இடையே ஒருவித பீதியை உருவாக்கியுள்ளது.

இந்த வேகத்தில் தங்கம் விலை உயர்ந்தால் இன்னும் சில தினங்களில் சவரன் 40 ஆயிரத்தை தொடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தங்கம் விலை தொடர் உயர்வு நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இனி வரும்  நாட்களில் தங்கம் விலை எட்டாக்கனியாகி விடுமோ என்று நகை வாங்குவோர் இப்போதே நினைக்க தொடங்கியுள்ளனர். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து நேற்று வரை சவரன் ரூ9200 அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஜனவரி முதல் தங்கம் கடந்த பாதை: 7 மாதத்தில் தங்கம் கடந்து வந்த பாதை வருமாறு:

ஜனவரி 1ம் தேதி சவரன்  : ரூ29,880
பிப்ரவரி 1ம் தேதி         : ரூ31,376
மார்ச் 2ம் தேதி           : ரூ32,200
மே 8ம் தேதி             : ரூ35,592க்கும்
ஜூன்1ம் தேதி            : ரூ35,928
நேற்று காலை            : ரூ39,032
நேற்று மாலை           : ரூ39,080
இன்று காலை            : ரூ39,232

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here