தங்கத்தின் விலை உயர்வு

0
222

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. நவம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில் கடைசி ஒரு வாரமாகத் தங்கம் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் மாதத்தின் – வாரத்தின் – கடைசி நாளான இன்று தங்கம் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆபரணத் தங்கத்தின் விலை

இன்று (நவ-30)சனிக்கிழமை சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.3,646 ஆக உள்ளது. நேற்றைய தினத்தில் இதன் விலை ரூ.3,626 ஆக இருந்தது. நேற்றைய விலையிலிருந்து 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 29,008 ரூபாயிலிருந்து இன்று 29,168 ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 160 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

தூய தங்கத்தின் விலை

24 கேரட் தூய தங்கத்தின் விலை இன்று (நவ-30)சனிக்கிழமை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, ரூ.3,807க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 3,787 ரூபாய்க்கு விற்பனையானது.

8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 30,296 ரூபாயிலிருந்து இன்று 30,456 ரூபாயாக உயர்ந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 160 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,706 ஆகவும், டெல்லியில் ரூ.3,692 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,731 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,625 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,547 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,625 ஆகவும், ஒசூரில் ரூ.3,626 ஆகவும், கேரளாவில் ரூ.3,530 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையும் இன்று (நவ-30) சனிக்கிழமை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 47.90 ரூபாயிலிருந்து 48.10 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 47,900 ரூபாயிலிருந்து 200 ரூபாய் உயர்ந்து ரூ.48,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here