தகுதி நீக்கம் செய்யப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளார் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். 

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அவற்றின் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. காங்கிரஸ் தரப்பில் விரைவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவுள்ளது.

அமமுக சார்பில் 24 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்தப் பட்டியலில் 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களும், 9 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் தர்மபுரி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தேனி தொகுதிக்கு தங்க தமிழ்ச்செல்வன். மற்றும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு பார்த்திபன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here