சமூகவலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’ பயனாளர்களின் தனிப்பட்ட கணக்கு விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து கூகுள் பிளஸ் மூடப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாகவும் , பயனாளர்களின் கணக்குகளை பராமரிப்பதில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும், அதனை சரியான முறையில் கண்டறிந்து தீர்வை தேடுவதற்கு அந்நிறுவனம் தவறி விட்டதாகவும் அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் செய்தி வெளியானது. இதனையடுத்து கூகுள் பிளஸ் சமூகவலைதளம் நிரந்தரமாக மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது .

போதுமான பயனார்களை ஈர்க்க தவறி விட்டதாலும், 500,000-க்கும் மேற்பட்ட கூகுள் பிளஸ் தனிநபர் கணக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் விரிவான சேவையை வழங்க முடியாத சூழல் இருந்து வருவதால் கூகுள் பிளஸ் சேவை மூடப்படுவதாக தெரிவித்துள்ளது.

கூகுள் பிளஸ் உருவாக்கம் மற்றும் பராமரித்தலில் குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதாலும், பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத காரணம் மற்றும் மிகக் குறைவான பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்

எனினும், ஆகஸ்ட் மாதம் வரை கூகுள் ப்ளஸ் கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்னும் 10 மாதங்களுக்குள் பயனர்கள் தங்களது தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது.

கூகுள் பிளஸ் சேவை 2011 -ஆம் ஆண்டு, ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் சேவை தொடங்கப்பட்டது.

பிரபல சமூக வலைத்தளமான முகநூல் பயனாளர்களின் கணக்குகளில் பெரியஅளவு பாதுகாப்பு குறைபாடு இருந்ததாகவும், 5 கோடி பேரின் கணக்குகள் ‘ஹேக்’ செய்யப்பட்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக முகநூல் நிறுவனம் கூறி வந்தது.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here