தகவல்‌ உரிமைச்‌ சட்டத்தின்‌ (ஆர்டிஐ) கீழ்‌ 32,000-க்கும்‌ அதிகமான மனுக்கள்‌ நிலுவையில்‌ உள்ளன – மத்திய அரசு

0
206

தகவல்‌ உரிமைச்‌ சட்டத்தின்‌ (ஆர்டிஐ) கீழ்‌ விவரங்கள்‌ கேட்கப்பட்டு அதற்கு பதிலளிக்கப்படாமல்‌ மத்திய தகவல்‌ ஆணையத்திடம்‌ 32,000-க்கும்‌ அதிகமான மனுக்கள்‌ நிலுவையில்‌ உள்ளன மாநிலங்களவையில்‌ தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர்‌ நலத்துறை இணையமைச்சர்‌ ஜிதேந்தர்‌ சிங்‌ எழுத்துமூலம்‌ அளித்த பதிலில்‌ மேலும்‌ கூறப்பட்டுள்ளதாவது:

2021-22 -ஆம்‌ ஆண்டில்‌ டிசம்பர்‌ 6-ஆம்‌ தேதி வரை 32,147 ஆர்டிஐ மனுக்கள்‌ நிலுவையில்‌ உள்ளன. இதுவே 2020-21-ஆம்‌ ஆண்டில்‌ 38,116 மனுக்களும்‌, 2019-20 -ஆம்‌ ஆண்டில்‌ 35,178 மனுக்களும்‌ நிலுவையில்‌ இருந்தன.

ஆர்டிஐ மூலம்‌ கேட்கப்படும்‌ விவரங்கள்‌, தகவல்களை முடிந்த அளவுக்கு விரைந்து அனுப்ப மத்திய அரசு தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளையும்‌ மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மக்கள்‌ தகவல்‌

தொடர்பு அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களும்‌, பயிற்சியும்‌ அளிக்கப்பட்டுள்ளது. இதன்‌ மூலம்‌ பதிலளிக்கப்படாமல்‌ நிலுவையில்‌ உள்ள மனுக்களின்‌ எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஆர்டிஐ மூலம்‌ அரசு நிர்வாகத்தில்‌ வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. ஆர்டிஐ தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில்‌ தகவல்‌ ஆணையத்துக்கு நிதியுதவியும்‌ அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here