தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீடு தர முடியாது – மார்க் ஜூக்கர்பெர்க்

0
192

வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீடு தொகை வழங்க முடியாது என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடி, தேர்தலுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பும் கேட்டார்.

இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் பேஸ்புக் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் ஆஜரானார். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டது உண்மை தான் என்றும் ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் கூறினார். அவரது இந்த விளக்கத்தால் சட்ட வல்லுநர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியது. அதற்கு பதிலளித்த ஃபேஸ்புக் நிறுவனம் தனது அறிக்கையின் மூலம் இழப்பீட்டு தொகை வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்