ட்விட்டரை தெறிக்கவிட்ட மகேஷ்பாபு ரசிகர்கள்

0
243

நேற்று ஆகஸ்ட் 9 தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாள். ரசிகர்கள் இணையத்தில் அவரை வாழ்த்தினர். ட்விட்டரில் மகேஷ்பாபுக்கான பிறந்தநாள் வாழ்த்து இந்திய அளவில் ட்ரெண்டானது.

தெலுங்கு சினிமாவில் பிற அனைவரையும்விட தனித்துவமான நாயகன் மகேஷ்பாபு. அவரது சமீபத்திய படம் பரத் அனே நேனு பல வசூல் சாதனைகளை படைத்தது. அவரது அடுத்தப் படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். 

நேற்று மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு வம்சி இயக்கும் படத்தின் பெயரை வெளியிட்டனர். அத்துடன் டீஸர் ஒன்றையும் வெளியிட்டனர். படத்துக்கு மகர்ஷி என பெயர் வைத்துள்ளனர். படத்தில் ரிஷி என்ற கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு நடிப்பதால் இந்தப் பெயர்.

கையில் லேப் டாப்புடன் மகேஷ்பாபு நடந்து வரும் மகர்ஷி டீஸர் இணையத்தில் வைரலாகியுள்ளது.

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here