படங்கள் இல்லாமலிருப்பது ஒரு பிரச்சனை என்றால், ஒரே நேரத்தில் பல படங்கள் வெளியாவது மற்றெnரு பிரச்சனை. இரண்டாவதில் சிக்கிக் கொண்டிருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.

2018 டிசம்பர் இறுதியில் வெளியாக வேண்டிய சர்வம் தாளமயம் படம் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியாவதால், பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் 100% காதல் படம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டும் ஜீ.வி. நடித்த படங்கள். பிப்ரவரி 1 சர்வம் தாளமயத்தை பார்க்கும் ரசிகர்கள் உடனடியாக இன்னொரு ஜீ.வி.பிரகாஷ் படத்தைப் பார்ப்பார்களா? சந்தேகம். வசூல் நிச்சயம் பாதிக்கப்படும். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் கையை பிசைந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தலையில் துண்டு போடும் மற்றொரு செய்தி.

ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ஐங்கரன் படம் இந்த மாதம் வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இம்மாதம் என்றால், நிச்சயம் 10 ஆம் தேதியாக இருக்காது. அன்று பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியாகின்றன. அடுத்த வாரமும் இந்தப் படங்கள் திரையரங்கை ஆக்கிரமிக்கும். அதனால் 18 ஆம் தேதியாக இருக்கவும் வாய்ப்பில்லை. எனில், மீதமிருப்பது 25 ஆம் தேதி. அன்று ஐங்கரன் வெளியானால், அடுத்த வாரமே (பிப்.1) சர்வம் தாள மயம். இரண்டு வாரம் கழித்து, 100% காதல்.

வருட ஆரம்பத்திலேயே கடும் ட்ராபிக் ஜாமில் திணறிக் கொண்டிருக்கின்றன ஜீ.வி.யின் படங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here