ஜான் மூர் , ஃபோட்டோகிராஃபிக்காக புலிட்சர் பரிசு வாங்கிய இவர் கெட்டி இமேஜஸ் (Getty Images) – க்காக வேலை பார்க்கிறார். இவர் யு.எஸ் – மெக்சிகோ (சட்டத்திற்கு புறம்பாக) எல்லைகளை கடந்து வருபவர்களை பல ஆண்டுகளாக படம் பிடிக்கிறார். இந்த வாரம் அவருடைய படங்களில் ஒன்று, அமெரிக்க எல்லைக்குள் நுழையும் குழந்தையுடன் வரும் பெற்றோர்களை தனித்தனியே பிரித்து காவலில் வைக்குமாறு பிறப்பித்த உத்தரவை அமெரிக்காவில் விவாதத்துக்கு உள்ளாக்கியது .

இந்த குழந்தையைப் பற்றி ஜான் மூர் ” இந்தக் குழந்தைக்கு நேர்ந்தது என்னை மிகவும் பாதித்தது . மிகச் சிறிய குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதும் குழந்தைகளின் ஓலமும் என் இதயத்தை நொறுக்கிவிட்டது. அந்தக் கஷ்டங்களை என்னால் பார்க்கமுடியவில்லை. ஹோண்டுராவிலிருந்து அம்மாவுடன் இந்த 2 வயது குழந்தை வந்திருந்தாள் . சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து விட்டார்கள் என்று 2 வயது குழந்தையின் அம்மாவை டெக்ஸாஸில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அம்மாவை கைது செய்து அழைத்து போகும் போது அவள் கதறி அழுதாள், அவளது அழுகையை பார்த்த நான் அவளை அள்ளிக் கொள்ள விரும்பினேன். ஆனால் என்னால் முடியவில்லை” என்று டைம் இதழிடம் கூறியிருக்கிறார் .

இந்த ஒளிப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால் பெற்றோரிடமிருந்து குழந்தையைப் பிரிக்கும் டிரம்பின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது . கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து எல்லைக்குள் நுழைபவர்களை குடும்பத்தோடு காவலில் வைக்க டிரம்ப் உத்தரவிட்டார். அதனால் டைம் வார இதழின் எடிட்டர் ஜான் மூரின் ஒளிப்படத்தை, ஜுலை 2, 2018 இதழின் அட்டைப் படமாக்கினார்.

Courtesy : TIME

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here