இந்தியாவில் திருமணத்துக்கான மேட்ரிமோனி இணைய தளங்களைவிட, டேட்டிங் செய்வதற்கான இணைய தளங்களைத் தேடுவோர் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கூகுளில் எத்தனையோ தகவல்கள் இருந்தாலும் இந்தியர்கள் பீட்சாவையும், டேட்டிங் செய்வதையுமே அதிகம் தேடுவதாக கூகுள் தெரிவித்துள்ளது. கூகுளின் தகவலின்படி பார்த்தால் இந்தியர்கள் இணையத்துக்கு வருவதே புதிய உறவுகளை தேடவும், பீட்சா போன்ற உணவுகளை வாங்கவும் தான் என்ற நிலை உள்ளதாக தெரிகிறது.

2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது டேட்டிங் தொடர்பான விவரங்களைத் தேடியோர் எண்ணிக்கை 2018ல் 37 சதவிகிதம் அதிகரித்ததாக கூகுள் நிறுவன ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆனால், திருமணத்திற்கான மேட்ரிமோனி தொடர்பான தேடுதல் 13 சதவிகிதம் மட்டுமே உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்தியர்கள் பீட்சா உணவையே அதிகம் தேடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மாநில மொழிகளிலேயே அதிக தகவல்கள் தேடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10ல் 9 பேர் மாநில மொழிகளிலேயே தகவல்களை தேடுகின்றனர். 

அதே போல் இந்தியர்கள் இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 33% தேடுதல், பொழுதுபோக்கு தொடர்பான வீடியோவுக்காவும், 80% தேடுதல் வாகனங்கள் குறித்த வீடியோவுக்காவும் உள்ளது. வணிகம், கல்வி, வாழ்வாதாரம் குறித்த தேடுதல்கள் கலவையாக உள்ளன. அதே போல் செல்போன்கள் மூலம் உணவுகளை ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக பீட்சாவைத் தான் அதிகம் தேடுவதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here