எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்வதால், தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்களுக்கும், டேங்கர் லாரி உரிமையாளர்களுக்குமான ஒப்பந்த காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய டெண்டருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், இனிவரும் காலங்களில் டெண்டர் மாநில அளவில் மட்டுமே நடத்த முடியும், இதில் அந்தந்த மாநில லாரி உரிமையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய டெண்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் (பிப்.12)காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் புதன்கிழமை (நேற்று) எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும், இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படததால் வேலைநிறுத்தம் தொடரும் என எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here