உலகின் முதலாவது பணக்காரரான எலான் மஸ்க்கின் கார் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘டெஸ்லா மாடல்-3’ எலக்ட்ரிக் கார் இந்தியாவில் கால் பதிக்க உள்ளது.
இந்தியாவில் அறிமுகமாக உள்ள ‘டெஸ்லா மாடல்-3’காரில் 50-75 கிலோவாட் லித்தியம் அயான் பேட்டரியுடன் இரண்டு மோட்டார் பொருத்தப்பட்டு, மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும்.
வேரியன்ட்டை பொறுத்து சிங்கிள் சார்ஜில் 381-580 கி.மீ. துாரம் செல்லும். 0-100 வேகத்தை 3.5 வினாடி/ 5.6 வினாடிகளில் எட்டும். சூப்பர் சார்ஜர் மூலம் 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 281 கி.மீ., செல்லலாம். மணிக்கு அதிகபட்சமாக 210 கி.மீ., வேகத்தில் பறக்கும்.
அதிக இடவசதி, பனோரமிக் சன்ரூப், ஆட்டோபைலட் வசதி, 15 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 2 வீல் டிரைவ், 4 வீல் டிரைவ் சிஸ்டம், 15 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ பார்க், ஆட்டோலேன் சேஞ்ச் சிறப்பம்சம்.

‘டெஸ்லா மாடல்-3’காரை இந்தியாவில் நேரடியாக விற்பனை செய்ய டெஸ்லா திட்டமிட்டுள்ளது. பெங்களூருவில் ஆய்வு மையம், இந்தியாவிலேயே கார்களை அசெம்பிள் செய்ய ஆலை, முக்கிய இடங்களில் சூப்பர் சார்ஜர் ஸ்டேஷன் அமைப்பது என பல திட்டங்கள் டெஸ்லா வசம் உள்ளது.
அதே சமயம் ஆன்லைன் மூலம் ‘டெஸ்லா மாடல்-3’ காரை புக்கிங் செய்பவர்களுக்கு இறக்குமதி செய்து காரை ‘டெலிவரி’ செய்யும்.
இதன் முன்பதிவு ஜனவரி – மார்ச் கால கட்டத்தில் துவங்க உள்ளது. ‘டெஸ்லா மாடல்-3’ எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.55 -75 லட்சம் (எக்ஸ்ஷோரூம்).