டெல்லி IIIT மாணவிக்கு கிடைத்தது வேலை : அவரோட ஆண்டு வருமானம் என்ன தெரியுமா?

0
278

டெல்லியில் உள்ள இந்திரப்பிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்( Indraprastha Institute of Information Technology(IIIT) Delhi) படித்து வரும் மாணவி வழக்கம் போல கேம்பஸ் இண்டர்வியூவில் பங்கேற்றார்.

இந்நிலையில், நேர்முகத் தேர்வில் தேர்வான அவருக்கு ஆண்டுக்கு ரூ. 1.45 கோடி வருமானம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த மாணவர்களிலேயே இதுவரை இவருக்குத் தான் அதிக சம்பளத்தில் பணி ஒப்பந்தம் கிடைத்துள்ளது. அந்தப் பெண் கம்யூட்டர் தொழிநுட்பம் படித்து வருகிறார்.

இவருடன் நடப்பாண்டில் மட்டும் மொத்தம் 562 பேர் கேம்பஸ் நேர்முகத் தேர்வில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 310 பேர் முழுநேரப் பணிக்கும் 252 பேர் பகுதி நேரப் பணிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், அடோப், குவால்காம், டவர் ரிசர்ச், கோல்ட் சாக், ரிலையன்ஸ், சாம்சங் ஆகிய நிறுவனங்களில் பணி அமரத்தப்படுவார்கள்.

இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 43 லட்சம் முதல் ரூ. 33 லட்சம் வரை சம்பள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சில நிறுவனங்கள் மாணவர்களுக்கு பயிற்சி வாய்ப்பும் வழங்கி அதற்காக உதவித் தொகையும் வழங்குகின்றன. வழக்கமாக பெரிய நிறுவனங்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க முன் வராது. ஆனால், தற்போது பெரிய நிறுவனங்களே மாணவர்களின் திறனைக் கண்டறிய பயிற்சி வழங்கி வருகின்றன. திறமையான மாணவர்களை இன்டர்ன்ஷிப்பில் கண்காணித்து தங்களது நிறுவனங்களின் பணிக்கு அவை தேர்வு செய்கின்றன.

கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here