டெல்லி யாருக்கு சொந்தம்? நாளை (புதன்கிழமை) தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்

0
338

தேசிய தலைநகரின் நிர்வாகம் மற்றும் ஆட்சியுரிமை யாருக்கு சொந்தம் என தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்ட அமர்வு நாளை (புதன்கிழமை) தீர்ப்பளிக்கிறது.

அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் அரசாங்கம் மற்றும் மத்திய அரசின் பிரநிதியான துணைநிலை ஆளுநர் ஆகிய இருதரப்புக்கும் இடையே நடக்கும் அதிகார மோதலைத் தொடர்ந்து டெல்லி யாருக்கு சொந்தம் என நாளை (புதன்கிழமை) தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்.

தேசிய தலைநகரின் நிர்வாகம் மற்றும் ஆட்சியுரிமை யாருக்கு சொந்தம் என தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்ட அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது.

ஜூன் (2018) மாதம், துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் ஒன்பது நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ஒருதலைபட்சமாக துணைநிலை ஆளுநர் செயல்படுவதாகவும் டெல்லி அரசாங்கத்தை செயல்படாமல் தடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக இருப்பதாகவும் கூறுகிறார்.

குறிப்பாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் சரியாக பணிக்கு வருவதில்லை எனவும், தங்கள் விருப்பம்போல செயல்படுவதாகவும், இதனை துணைநிலை ஆளுநர் தலையிட்டு திருத்தவேண்டும் எனவும் கூறியிருந்தார் கெஜ்ரிவால்.

2018 பிப்ரவரி மாதம் முதல்வர் வீட்டில் நடைபெற்ற நள்ளிரவு சந்திப்பில் தான் தாக்கப்பட்டதாக தலைமை செயலாளரும் மிக மூத்த அதிகாரியுமான அன்ஷு பிரகாஷ் குற்றம்சாட்டியதை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனான அர்விந்த் கெஜ்ரிவாலின் மோதல் தொடங்கியது. இக்குற்றச்சாட்டினை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. கெஜ்ரிவால் வீட்டிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த டெல்லி காவல்துறை கெஜ்ரிவாலிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியது.

பாஜகவிற்கு எதிரான கட்சிகள் இந்நடவடிக்கையை கடுமையாக கண்டித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டின. ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான மோதலில் அதிகாரிகள் சிக்கியுள்ளதாக கருதப்படுகிறது.

பல நேரங்களில் மாநில கட்சிகள், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் உட்பட, மாநிலங்களின் அடிப்படை உரிமைகள் அவமதிக்கப்படுவதாக குற்றம்சாட்டுவது வழக்கம். நரேந்திர மோடி கடுமையாக பிரச்சாரம் செய்தும் 2015 டெல்லி சட்டமன்ற
தேர்தலில் மூன்று தொகுதிகளை தவிற அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றிபெற்றதை, பிரதமரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறார் கெஜ்ரிவால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here