மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் வரும் 6-ம் தேதி முதல் 19 வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்திய முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு அனுமதியுடன் சில விமானங்கள் மட்டும் தான் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கவும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலார்களை மீட்க மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் மேற்கு வங்க மாநிலம் இந்தியாவில் 6-வது இடத்தில் உள்ளது. தற்போது வரை மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20,488 பேர் ஆகும். மேலும் 593 பேர் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இவர்களில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அம்மாநில அரசு, மாநிலங்களுக்கு இடையேயான விமான சேவையை ஜூலை 6-ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை ரத்து செய்துள்ளது. குறிப்பாக கொல்கத்தாவில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், அகமதாபாத்துக்கு விமானங்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருவதை கருத்தில் கொண்டு, மேற்கு வங்க அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கொல்கத்தா விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here