இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவலும், ஒமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்துப்பின் இந்தியாவில் கொரோனா தொற்று 27ஆயிரத்தை எட்டியுள்ளது. அதேசமயம் ஒமிக்ரான் பாதிப்பும் 1500க்கும் மேல் உயர்ந்துவிட்டது.

டெல்லியில்  கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி டெல்லியில் 2,716 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர், இதில் 247 பேருக்கு மருத்துவமனை அனுமதி தேவைப்பட்டது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று நாட்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. எனினும், ஒமிக்ரான் பரவல் அச்சம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது., எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

நோய்த்தொற்றின் லேசான அறிகுறிகள் உள்ளன. இதனால் நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று ட்வீட் பதிவு செய்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here