டெல்லி மாநாடு குறித்து சர்ச்சைக் கருத்து : ஹிந்து மகாசபா தேசிய செயலாளர் கைது

0
2878

டெல்லி மாநாடு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ஹிந்து மகாசபா தேசிய செயலாளர் பூஜா சகுன் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் 137 பேர் பலியாகியுள்ளனர்.

 4908 பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தமார்ச் மாத துவக்கத்தில் பல்வேறு வெளிநாட்டினரின் பங்களிப்போடு டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களில், பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லி மாநாடு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ஹிந்து மகாசபா தேசிய செயலாளர் பூஜா சகுன் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார். இவர், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதமொன்றில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டதும் சுட்டுக் கொல்ல உத்தரவிட வேண்டும் என்று சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து, காந்தி நகர் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.  

ஏற்கனவே,கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை பூஜா சுடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here