டெல்லி மசூதியின் ஷாஹி இமாமின் முக்கிய அறிவிப்பு

The Shahi Imam of Fatehpuri mosque in Delhi has appealed to Muslims to not step out during Ramzan and offer prayers at home.

0
326

டெல்லியில் உள்ள பதேபூரி மசூதியின் ஷாஹி இமாம், ரம்ஜானின் போது வெளியேற வேண்டாம் என்றும் வீட்டிலேயே பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முழு முடக்க நடவடிக்கை மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14 வரை அறிவித்திருந்த இந்த நடவடிக்கை தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும், வீட்டிலேயே இருக்குமாறும் அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல்  23 ஆம் தேதி வரக்கூடிய ரம்ஜான் பண்டிகையில் முஸ்லிம்கள் யாரும் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டாம் என பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் அறிவுறுத்தியுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பதேபூரி மசூதியின் இமாம் முப்தி முகர்ரம் அகமது முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Mukarram-Ahmed

அதில், கோவிட் -19 மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால், தயவுசெய்து டாக்டர்களின் ஆலோசனையைக் கேளுங்கள். காரணமின்றி உங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டிலேயே நோன்பைக் கடைபிடியுங்கள். பிரார்த்தனைகளையும் வீட்டில் தனியாக செய்யலாம். தயவுசெய்து உங்களுடன் பிரார்த்திக்க அண்டை வீட்டாரை அழைக்க வேண்டாம்,’ என வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோல், ஐதராபாத்தில் நேற்று (திங்கள்கிழமை) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஜாமியா நிஜாமியாவைச் சேர்ந்த முப்தி கலீல் அகமது பாஷாவும், வீட்டிலேயே தங்கியிருந்து அனைத்து மத சடங்குகளை செய்யவும் முஸ்லிம்களை கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி, முஸ்லிம்கள் ஊரடங்கு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கவும், ரம்ஜானில் தங்கள் வீட்டிலேயே தங்கியிருந்து அனைத்து மத சடங்குகளை செய்யவும் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here