டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (National Students’ Union of India – NSUI) அமோக வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலின் முடிவுகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகங்களில் நடைபெறும் மாணவர் சங்கத் தேர்தல்கள் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது செல்வாக்கு மாணவர்கள் மத்தியில் எந்தநிலையில் உள்ளது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்கின்றனர்.

இரு தினங்களுக்கு முன்னர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில், இடதுசாரி மாணவர் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தது. இத்தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி (Akhil Bharatiya Vidyarthi Parishad -ABVP) கடும் தோல்வியைச் சந்தித்தது.

delhi

இதில், இடதுசாரி மாணவர் கூட்டணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கீதா குமாரி வெற்றிபெற்றார். அதேபோன்று, துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சைமன் ஜோயா கான், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட துகிராலா ஸ்ரீகிரிஷா, இணைப் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஷுபான்ஷூ சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இத்தேர்தலில் மொத்தம் பதிவான 4639 வாக்குகளில் 4620 வாக்குகள் செல்லத்தக்கவையாக அறிவிக்கப்பட்டன. முக்கிய தலைமை பதவிகளில் இடதுசாரி கூட்டணி வெற்றிபெற்றிருந்தது அக்கட்சியினரிடையே மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, டெல்லி பல்கலைக்கழக்த்திற்கு நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி (Akhil Bharatiya Vidyarthi Parishad -ABVP) மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 40 கல்லூரிகளில் மொத்தம் 1,02,624 மாணவர்கள் உள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.12ஆம் தேதி) நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் 46,504 மாணவர்கள் வாக்களித்திருந்தனர்.

delhi-1

இதற்கான முடிவுகள் புதன்கிழமை (இன்று) அறிவிக்கப்பட்டன. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராக்கி துஷீத்தும் (National Students’ Union of India – NSUI) துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட குணால் ஷெராவத்தும் வெற்றி பெற்றனர். அதேபோன்று செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபியைச் சேர்ந்த மகாமெதா மற்றும் உமா சங்கர் ஆகியோர் வெற்றிபெற்றனர்.

delhi-2

முக்கிய தலைமைப் பொறுப்புகளில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (National Students’ Union of India – NSUI) வெற்றி பெற்றுள்ளதற்கு அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ”ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியா வெளியேற்ற கூடாது”: ஜவாஹிருல்லா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்