டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதிகளில் அதிக வாக்குப்பதிவு

Three Muslim-dominated seats -- Seelampur, Mustafabad and Matia Mahal -- recorded the highest voter turnout in the elections in which the Aam Aadmi Party (AAP) is seeking to retain power in what is seen as a bipolar contest against the Bharatiya Janata Party (BJP).

0
213

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 3 தொகுதிகளில் அதிகளவு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று (சனிக்கிழமை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

இதில் மொத்தம் 61.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

இந்நிலையில், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 3 தொகுதிகளில் அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 

நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வடகிழக்கு டெல்லி பகுதியில் உள்ள முஸ்தஃபாபாத் தொகுதியில் 66.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டங்களைக் கண்ட பழைய டெல்லியில் உள்ள மாதியா மஹாலில் 65.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மற்றொரு பகுதியான சீலாம்பூரில் 64.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும், ஜாஃப்ராபாத், ஜாமியா நகர், துர்க்மேன் கேட் மற்றும் ஷகீன் பாக் ஆகிய பகுதிகளில் வாக்களிப்பதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இங்கெல்லாம் சிஏஏ-வுக்கு எதிராக அதிக அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மியே அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here