டெல்லி கலவரம்; போராடும் உரிமைக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இடையேயான கோட்டை அரசு மழுங்கடித்துள்ளது; மாணவர் அமைப்பினர் 3 பேருக்கு ஜாமீன்

The bail orders in the UAPA cases against Natasha Narwal, Devangana Kalita and Asif Iqbal Tanha question the veracity of Delhi Police's accusations.

0
245

டெல்லி கலவரத்திற்கு தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டிருந்த மாணவர் அமைப்பைச் சேர்ந்த தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஆசிப் இக்பால், தன்ஹா ஆகியோருக்கும் பிணை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்திற்கு சதி செய்த குற்றச்சாட்டின் பெயரில் மாணவர் அமைப்புகளை சேர்ந்த தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

பிணை வழங்கிய நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் ஏ.ஜே. பம்பானி அடங்கிய அமர்வு, “எதிர்ப்பை ஒடுக்குவதற்காக, போராட்டம் நடத்துவதற்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கும் உரிமைக்கும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இடையேயான கோட்டை அரசு மழுங்கடித்துள்ளது என்பதை வெளிப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த மனநிலை தொடர்ந்தால், அது ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்” என தெரிவித்தது.

உத்தரவின் நகலைச் சம்பந்தப்பட்டவர்களின் வழக்கறிஞர்களுக்கு விரைந்து வழங்க வேண்டும் என கூறியுள்ள நீதிபதிகள், “குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று பேருக்கும், தலா இரண்டு உள்ளுர் நபர்கள் ஜாமீன் மற்றும் ரூ. 50 ஆயிரத்திற்கான தனிநபர் பத்திரங்களை சமர்பித்தல் போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளனர்.

தேவங்கனா நான்கு வழக்குகளிலும், நடாஷா மூன்று வழக்குகளில் விசாரணையை எதிர்கொண்டு இருக்கும் நிலையில், இருவரும் அனைத்து வழக்குகளிலும் பிணை வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என அவர்களது வழக்கறிஞர் அதித் பூஜாரி கூறியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் செல்போன் எண்களை உள்ளூர் காவல்நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் சிறை பதிவேட்டில் தெரிவித்திருக்கும் முகவரியிலேயே வசிக்க வேண்டும் அல்லது அவர்கள் வசிப்பிடம் மாற்றப்பட்டால் அதனையும் காவல்நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் எந்தவொரு அரசு தரப்பு சாட்சியங்களுடன் தொடர்பு கொள்ளவோ அல்லது ஆதரங்களை சிதைக்கவோ முயற்சிக்க கூடாது. அதே போன்று பிணையில் இருக்கும் காலத்தில், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here