டெல்லி கலவரம்; காவல்துறையினர் தங்கள் தவறை மறைக்கிறார்கள்; 10 பேர்மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

0
217

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின்போது கடைகளுக்கு தீவைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட 10 பேர்மீதான குற்றச்சாட்டுகளை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காவல்துறையினரின் தவறை மறைப்பதற்காக இருவேறு தினங்களில் நடைபெற்ற சம்பவங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 24 ஆம் தேதி தனது இரண்டு கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டதாக திவான் சிங் அளித்த புகார் மற்றும் பிப்ரவரி 25 ஆம் தேதி தனது கடைக்குத் தீ வைக்கப்பட்டதாக பிர்ஜ்பால் அளித்த புகார் என மொத்த மூன்று புகார்களின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்த கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ், “புகார் கொடுத்தவர்களின் முதல் கட்ட புகாரில், கலவரக்காரர்கள் தீ வைத்ததாகவோ அல்லது வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாகவோ ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை” என கூறியுள்ளார்.

 புகார் கொடுத்த திவான் சிங் வழங்கியிருந்த இரண்டாவது அறிக்கையில் கடைகளுக்குத் தீ வைத்ததாக குறிப்பிடபட்டிருந்தது . அதனை ஏற்க மறுத்த நீதிபதி, புகார் கொடுத்தவர்களிடம்  இருந்து துணை அறிக்கைகளை பெற்று காவல்துறையினர் தங்கள் தவறுகளை மறைக்க முடியாது என நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவ தினத்தற்கு அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தீ வைத்ததாக குற்றம்சாட்டியிருப்பதை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இரண்டு தினங்களிலும் ஒரே கும்பல் தான் கலவரத்தில் ஈடுபட்டனர் என்பதற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லாத நிலையில், பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் தேதியில் நடைபெற்ற இரண்டு சம்பவங்களையும் காவல்துறையினர் ஒன்றாக இணைத்துள்ளனர் என்பது புரியவில்லை என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வழக்கைத் தலைமை பெருநகர நீதிபதிக்கு மாற்றி நீதிபதி வினோத் யாதவ் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here