நீரவ் மோடி, மல்லையாவுடன் நட்பு பாராட்டும் மோடி, எங்கள் மீது வருமானவரி அதிகாரிகளை ஏவி விடுகிறார் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லாட்டுக்குச் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடந்ததை அடுத்து கெஜ்ரிவால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தனது டிவிட்டர் பக்கத்தில் நீரவ் மோடி, மல்லையாவுடன் நட்பு; எங்களுக்கு ஐடி ரெய்டா? மோடிஜி நீங்கள் எனக்கு, சத்யேந்தருக்கு மற்றும் மனிஷுக்கு ஐடி ரெய்டு நடத்தினீர்கள். ஆனால் அவை என்ன ஆனது? உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

அதனால் அடுத்த சோதனைக்குச் செல்லும் முன் குறைந்தபட்சம் டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த அரசுக்குத் தொல்லை கொடுப்பதற்காக என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லாட்டின் வீடு மற்றும் 15 இடங்களில் புதன்கிழமை காலை ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. கெஹ்லாட் வரி ஏய்ப்பு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படுவதால் இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Courtesy : NDTV

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்