காற்றுமாசு கடுமையாக அதிகரித்திருப்பதால் டெல்லியில் நாளை முதல் பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளால், டெல்லியில் காற்று மாசு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் புகை மண்டலமாகவே காட்சியளிக்கிறது.

நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரக்குறியீடு 471 ஆக பதிவாகி உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. எனவே அவசர கால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அம்மாநில அரசுக்கு, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது.

Delhi-Chief-Minister-Arvind-Kejriwal-has-ordered-a-week-long-school-holiday-in-Delhi-from-tomorrow

இதனையடுத்து காற்று மாசை குறைப்பது குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இதன் முடிவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நாளை முதல் (நவம்பர் 15) முதல் ஒரு வார காலத்துக்கு பள்ளிகள் மூடப்படும்.

மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயில அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாளை முதல் வரும் 17ஆம் தேதி டெல்லியில் கட்டிட பணி எதுவும் நடைபெறக் கூடாது என தடைவிதிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள் மூடப்படுவதுடன், ஊழியர்கள் அனைவரும் 100% வீட்டில் இருந்தே பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் கூடுமானவரையில் தங்கள் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போதைய நிலவரப்படி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை என்றபோதிலும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசிக்கப்படுவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி 👇
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here