டெல்லியில் விடுதி கட்டண உயர்வை கண்டித்து, நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, போலீசார் தடியடி நடத்தியதில் ஒருசிலருக்கு காயம் ஏற்பட்டது.

மாணவர்களின் போராட்டத்தினால் 4 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைகழகத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்து கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here