டெல்லியில் சம்பளம் கேட்ட சிறுமியை கொலை செய்த கொடூரம்

0
155

டெல்லியில் மியான்வாலி நகர் பகுதியிலுள்ள வாய்க்காலில் 16வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அந்தச் சிறுமியை கொலை
செய்து மூன்று துண்டுகளாக வெட்டி வாய்க்காலில் வீசியிருந்தனர் . இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்
அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அப்பகுதியில்பெண்கள் யாரவது காணாமல்
போனதாக புகார் உள்ளதா என்பதை எல்லாம் ஆராய்ந்தனர்.சுமார் 200 குடும்பங்கள் வசித்து வரும் அப்பகுதியில்
ஜார்கண்டை சேர்ந்த மன்ஜீத் கர்கேத்தா என்பவர் வசித்துவந்ததாகவும் அவர் கடந்த சில நாட்களாக காணவில்லை என்ற தகவல் காவல்துறைக்கு கிடைத்தது .
இதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் .சிறுமியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அந்தப் சிறுமி ஜார்கண்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

“ஜார்கண்டை சேர்ந்த சிறுமியை டெல்லிக்குஅழைத்து வந்து வீட்டு வேலை செய்யும் பணியில் சேர்த்து விட்டுள்ளார் மன்ஜீத் கர்கேத்தா. மன்ஜீத் அந்தப் சிறுமிக்கு சம்பளம் தராமல் இருந்திருக்கிறார் . இந்நிலையில் பணியை விட்ட அந்தச் சிறுமி தனது சம்பளத்தை திருப்பித்தர மன்ஜீத்திடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தச் சிறுமியை கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கு ஒரு பெண்ணும் உடந்தை. அந்தச் சிறுமியின் உடலை மூன்று துண்டுகளாக வெட்டி அப்பகுதியில் உள்ள கால்வாயில் வீசியுள்ளனர் என்று காவல்துறையினரின் விசாரணையில்
தெரிய வந்துள்ளது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்