டெல்லியில் காற்றுமாசைக் குறைக்கத் தேவைப்பட்டால் ஒற்றை, இரட்டை இலக்க வாகனங்களை ஒருநாள்விட்டு ஒருநாள் இயக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 4நாட்களாகக் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இத்துடன் வாகனப்புகையும் தொழிற்சாலைப் புகையும் சேர்ந்துள்ளதால் காற்றுமாசு அதிகரித்துப் பொதுமக்கள் மூச்சுத்திணறலால் துன்புற்று வருகின்றனர். இந்நிலையில் காற்றுமாசைக் கட்டுப்படுத்த அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

பல இடங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும், பொதுப்போக்குவரத்துக்காக மூவாயிரம் பேருந்துகள் வாங்கியுள்ளதாகவும் அரவிந்த் கேஜ்ரிவால் பதிலளித்தார். புதிய மெட்ரோ ரயில்பாதைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் ஒற்றை இரட்டை இலக்க வாகனங்களை ஒருநாள் விட்டு ஒருநாள் வாகனங்களை இயக்கும் முறை செயல்படுத்தப்படும் என்றும் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here