தலைநகர் டெல்லியில் காற்று மாசு அனுமதிக்க அளவைவிட பன்மடங்கு அதிகரித்ததால் அதனைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தநடவடிக்கைகள் ஓரளவுக்கு மாசைக் கட்டுக்குள் கொண்டுவந்தாலும் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சூழ்ந்த கரியமலம் கலந்த புகையினால் சில நாட்களாக மீண்டும் காற்று மாசு அபாயகரமான உச்சக்கட்ட நிலையை எட்டியது.

மேலும், அருகாமையில் உள்ள அரியானா, பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் நெல் மற்றும் கோதுமை பயிர்களின் வைக்கோல் தீயிட்டு எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை மூட்டம் தற்போது டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்து சுவாசிக்க தகுதியற்ற அபாயகரமான அளவை எட்டியுள்ளது.

இந்த காற்று மாசினால் சிறுவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நவம்பர்  5ஆம் தேதி வரை அரசு பள்ளிகள், அரசின் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) டெல்லியை சுற்றிலும் கடுமையான புகைமூட்டம் காணப்பட்டது. பொழுது விடிந்து, காலை 10 மணி வரையிலும் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்கை பயன்படுத்தி மெதுவாக ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.

டெல்லி விமான நிலையம் பகுதியிலும் புகைமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், அங்கு தரையிறங்க வந்த 32 விமானங்கள் லக்னோ, அம்ரிஸ்டர், ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here