டெல்லியில் இன்று முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு?

0
143
A car moves in a nearly empty road during a 14-hour long curfew to limit the spreading of coronavirus disease (COVID-19) in the country, in Ahmedabad, India, March 22, 2020. REUTERS/Amit Dave

கொரோனா பெருந்தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், புது டெல்லியில் இன்று முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் திங்கள்கிழமை புதிதாக 3,548 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 15 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் டெல்லியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11,096 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 30 வரை இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், கடந்த சில வாரங்களாக கொரோனா பரிசோதனை செய்யப்படுவோரில், தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 5.54 சதவீதமாக உயர்ந்திருப்பதும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here