டெல்லியில் இன்று (ஜூன் 24) ஒரே நாளில் 3,788 பேருக்கு கொரோனா

Delhi’s COVID-19 situation has been worsening over the past weeks, ever since the lockdown rules were relaxed.

0
609

டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் 3,788 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய தகவலை டெல்லி சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,788 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டி 70,390 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 64 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 2,365 ஆக உயர்ந்துள்ளது.

 அதேசமயம், இன்று மட்டும் 2,124 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 41,437 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 26,588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அங்கு இன்று மட்டும் 19,059 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,20,707 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here