delhi-daredevils-vs-chennai-super-kings-bcci_625x300_1526551775722
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

டாஸ் வென்று சென்னை அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது.டெல்லி அணிக்குத் துவக்க வீரர்கள் சொதப்பினாலும், ரிஷாப் பன்ட், ஹர்ஷல் படேல் மற்றும் விஜய் சங்கர் சிறப்பாக ஆடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
687516-pantafp970

இதன் பின் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக பவுல்ட் மற்றும் அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஆட்டம் முடிந்தவுடன் பேசிய தோனி, “2வது பாதியில் பிட்ச் மேலும் கடினமானது. யாரும் மிடில் செய்ய முடியவில்லை. பவுலர்கள் நன்றாக வீசினர் என்று கூறினார்.
delhi-daredevils-happy-bcci_806x605_71525495635

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்