டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கட்சிக்கு ஆதரவு: அர்விந்த் கெஜ்ரிவால்

0
109
Arvind Kejriwal

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கட்சிக்கு அடுத்து ஆட்சியமைக்க ஆம்ஆத்மி முழு ஆதரவு அளிக்கும் என முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.  தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அர்விந்த் கெஜ்ரிவால் 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்து டெல்லியின் கட்டமைப்பும், மக்களின் வளர்ச்சியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே டெல்லியில் ஆம்ஆத்மி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே மக்களவைத் தேர்தலிலும் எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். 

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். டெல்லியின் 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மியை வெற்றிபெறச் செய்யுங்கள். மத்தியில் அடுத்து யார் ஆட்சியமைக்கப்போகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இந்த 7 எம்.பி.க்களின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே அவர்கள் நம்மிடம் ஆதரவு கேட்டு வருவார்கள். அப்போது டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க உறுதியளிப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here