உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு நேற்று இணையவழியில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி டெலிப்ராம்ப்டர் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நிமிடங்கள் தயங்கித் திணறினார். அந்த வீடியோவை வெளியிட்டு கிண்டல் செய்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் தான் அன்றே சொன்னேனே, பிரதமர் மோடியால் டெலிப்ராம்டர் இல்லாமல் பேசவே முடியாது என்று. ‘டெலிப்ராம்ப்டரால் கூட நிறைய பொய்களை ஏற்க முடியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ராகுல் காந்தி ஏற்கெனவே ஒரு பேட்டியில் மோடியால் டெலிப்ராம்ப்டர் இல்லாமல் பேசவே முடியாது எனக் கூறியதும். அடுத்ததாக நேற்றைய மாநாட்டில் பிரதமர் மோடி ப்ராம்ப்டர் வேலை செய்யாததால் திணறியதும் இடம் பெற்றிருந்தது
பிரதமரின் டெலிப்ராம்ப்டர் கோளாறு ஏற்பட்டது தொடர்பான கருத்து ட்விட்டரில் ட்ரெண்டானது.
முன்னதாக,டாவோஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம். இந்த உலகிற்கு இந்தியா ஜனநாயக நம்பிக்கை, தொழில்நுட்ப சக்தி மற்றும் இந்தியர்களின் திறமை, சுவாபம் கொண்ட ஒரு செண்டைக் கொடுத்து முதலீட்டாளர்களை வரவேற்றுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்” என்று கூறியிருந்தார்.
டெலிப்ராம்ப்டர் கோளாறு மோடிக்கு நடந்த மிக மோசமான கனவு என்று பதிவிட்டுள்ளார் இசை
டெலிப்ராம்ப்டர் செயலிழந்த போது நாட்டின் உச்ச நாற்காலியில் அமர்ந்திருப்பவரால் ஒரு வார்த்தைகூட பேசமுடியவில்லை. மோடி பேச்சு திறன் அதிகம் கொண்டவர் என்று புகழபட்டவர் . அவர் எப்படி ஊரை எமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது இப்போது தெரிந்திருக்கிற்து என்று பதிவிட்டுள்ளார் மயாங்க் சக்சேனா.