டெபிட் கார்டு, பீம் செயலி, யூபிஐ (UNIFIED PAYMENTS INTERFACE UPI), ஏஇபிஎஸ் (AADHAAR ENABLED PAYMENT SYSTEM – AEPS) உள்ளிட்டவைகள் மூலம் 2000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இந்த சலுகைத் திட்டம் ஜன.1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தச் சலுகை இரண்டாண்டுகள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தின் மூலம் வங்கிகளுக்கு ஏற்படும் செலவுகளை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டில் 1,050 கோடி ரூபாய் மற்றும் அதற்கு அடுத்த ஆண்டில் 1,462 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: மனச்சோர்வுக்கு ஆளாகி தற்கொலை எண்ணம் வருகிறதா உங்களுக்கு ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்