அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு கொசுவை ஒழிப்பதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், டெங்கு மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் பல்வேறு காய்ச்சல்களைக் கட்டுப்படுத்துதல் குறித்து ஆய்வு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் :

* அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னையில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் அடுத்த 15 நாட்களுக்கு அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில், டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள நீர் தேங்கும் இடங்கள், குப்பைகூளங்கள், கட்டுமானப் பகுதிகள் ஆகியவற்றை முழுமையாக துப்புரப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

* இப்பணிகளை, வட்டம் மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்கள் தினந்தோறும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கூறிய நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறுவதை கண்காணித்து உறுதி செய்து தினசரி அறிக்கை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

eps

* இப்பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அனைத்து இடங்களிலும் கூடுதல் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

* பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும். சுத்தம் செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்கு நோயினை உருவாக்கும் கொசுக்கள்/ புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால், 1939ம் ஆண்டு பொது சுகாதார சட்டத்தின் கீழ் அந்த இடத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவைப்படும் அனைத்து மருத்துவ மனைகளிலும் கூடுதல் மருத்துவர்கள், மற்றும் செவிலியர்கள் அமர்த்தப்படுவார்கள். மேலும் இப்பணிகளை ஒருங்கிணைக்கவும், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து தேவைகளை நிறைவேற்றவும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்திய ஆட்சிப்பணி நிலையிலுள்ள ஒரு உயர் அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. அவர்கள் உடனடியாக மாவட்டத்திற்கு சென்று தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்