உலக நாட்டுத் தலைவர்களில் பலர் இன்று டிவிட்டரில் பல முக்கியமான கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். அது மட்டுமல்ல வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தினரும் உடனுக்குடன் உலகத் தலைவர்களின் டிவீட்டுகளைப் படிப்பதில் மிகப் பெரிய ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்கள் யார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. கடந்த 12 மாத இடைவெளியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளின் விவரங்களை இப்போது பார்க்கலாம் :

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமூக வலைத்தளமான டிவிட்டரில் 5.2 கோடிக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர, அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக, இந்த பட்டியலில் 4.75 கோடிக்கும் அதிகமான நபர்களுடன் போப் பிரான்சிஸ் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

சுமார் 4.3 கோடி நபர்கள் பின்தொடர இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஜோர்டான் நாட்டு ராணி ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

சுஷ்மா சுவராஜ்தான் வெளியுறவு துறை மந்திரிகளிலேயே மிக அதிகமாக பின்தொடர்பவர்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here