உத்தரகாண்ட் மாநில முதல்வர் அலுவலகத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு டீ மற்றும் ஸ்நாக்ஸ் வாங்க கடந்த 10 மாதங்களில் 68.59 லட்சம் ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக, கடந்த மார்ச் 18ஆம் தேதி திரிவேந்திர சிங் ராவத் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஹேமந்த் சிங் என்பவர், முதல்வர் அலுவலகத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு டீ மற்றும் ஸ்நாக்ஸ் வாங்க செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்று ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு அம்மாநில அரசு பதிலளித்திருந்தது. அதில், கடந்த 10 மாதங்களில் டீ மற்றும் ஸ்நாக்ஸ் வாங்க 68,59,865 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

source: ANI

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here