2.0 படத்தின் டீஸர் நேற்று வெளியானது. முதல் நாளிலேயே மெர்சலின் டீஸர் சாதனையை 2.0 உடைத்திருக்கிறது.

முன்பு ஒரு படம் ஓடும் நாள்களை வைத்து வெற்றி, தோல்வி, நடிகரின் ஸ்டார் பவர் ஆகியவற்றை கணித்தார்கள். இன்று எந்தப் படத்துக்கும் அதிகபட்சம் இரண்டு வாரங்கள்தான். டீஸர், ட்ரெய்லரின் யூடியூப் பார்வை மற்றும் லைக்குகளை வைத்தே நடிகரின் ஸ்டார் பவர் கணக்கிடப்படுகிறது.

விஜய்யின் மெர்சல் படத்தின் டீஸர் முதல்நாளில் கோடி பார்வைகளை பெற்று சாதனை படைத்திருந்தது. அதனை 2.0 உடைத்துள்ளது. நேற்று 2.0 படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி டீஸர்கள் வெளியாகின. இவை மூன்றும் இணைந்து முதல்நாளில் 2.4 கோடி பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது.

மெர்சலின் தமிழ் டீஸர் முதல்நாளில் ஒரு கோடி பார்வைகளை பெற, 2.0 படத்தின் மூன்று மொழி டீஸர்களும் சேர்த்து 2.4 கோடி பார்வைகள். இதனை ரஜினி ரசிகர்கள் சாதனை என்கிறார்கள். விஜய் ரசிகர்கள் செல்லாது என்கிறார்கள். சர்கார் வரும்போது இந்த சாதனை மாற்றி எழுதப்படலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்