டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்க முடிவு

The men's T20 World Cup, which is scheduled for October-November later this year, is reportedly set to be postponed this week.

0
126

சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று இன்னும் குறையாத நிலையில் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜூன் 10 அன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் ஆஸ்திரேலியாவில் அக்டோபர்18 முதல் நவம்பர்15 வரை திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்பது குறித்து, ஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சுறுத்தல் குறைந்துள்ள நிலையில் பொறுத்திருந்து இறுதி முடிவை எடுக்க ஐசிசி திட்டமிட்டது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடத்த ஏராளமான சிக்கல்கள் உள்ளதால் இதுகுறித்து முடிவெடுக்க இந்த வாரம் வெள்ளியன்று ஐசிசி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் டி20 உலகக் கோப்பையை ஒத்திவைக்கும் முடிவை எடுக்கவுள்ளது ஐசிசி. இத்தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐசிசி ஒத்தி வைத்தால், செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எனினும் ஐசிசியின் முடிவை வைத்தே பிசிசிஐயின் திட்டங்கள் செயல்வடிவம் பெறும்.

அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் ஆஸ்திரேலியாவில் 2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை நடத்தவும் ஐசிசி யோசித்து வருகிறது.

இதையடுத்து ஆஸி. வீரர்களுக்கு செப்டம்பரில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள், டி20 தொடர்களுக்காகப் பயிற்சி எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.இத்தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here