டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் பின்னடைவு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

Tamil Nadu Cricket Association (TNCA) announced on Saturday that the fifth Tamil Nadu Premier League (TNPL) could be held in November or next year if coronavirus is contained by then.

0
66

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பரவலின் தீவிரம் குறையாத காரணத்தினால் டி.என்.பி.எல் தொடரை திட்டமிட்டபடி நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக்(டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்தஜூன் 10 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை சேலம், கோவை, நத்தம், நெல்லை ஆகிய இடங்களில் நடக்க இருந்தது. கொரோனா அச்சத்தால் இந்தப் போட்டி மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக கடந்த மே மாதம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.

இந்த ஆலோசனையின் முடிவில், டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரை தற்போது நடத்த வாய்ப்பில்லை என்றும், ஒரு வேளை சாத்தியக் கூறுகள் உருவாகும் பட்சத்தில் நவம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் போட்டிகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது என கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி இது குறித்து கூறியதாவது: டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரை தற்போது நடத்துவது சாத்தியமில்லை. கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். நவம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம்டி.என்.பி.எல் கிரிக்கெட் நடைபெற வாய்ப்புள்ளது” என்றார்.

முன்னதாக தள்ளிவைக்கப்பட்ட டி.என்.பி.எல். போட்டியை ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆலோசித்து வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தற்போது அதிகமாக இருப்பதால் இந்த மாதத்தில் போட்டியை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here