டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசம் : அசத்தும் ஜியோ

The new Rs. 222 Jio data pack includes 15GB of high-speed data that will be valid for the duration of subscriber’s base plan.

0
138

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களுக்கும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கியது. அதேபோல் இம்மாத துவக்கத்தில் விஐபி ஒரு வருட சந்தாவை ரூ. 401, ரூ.2599 உள்ளிட்ட சலுகைகளை தேர்வு செய்யும் வாடிக்கையார்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக ரீசார்ஜ் திட்டங்களில் அதிவேக டேட்டா, குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளையே வழங்கியது. ஆனால் ஜியோ புதிதாக அறிமுகம் செய்யும் திட்டங்களில் ஜியோ டிஸ்னி ப்ளஸ் மற்றும் ஹாட்ஸ்டார் சேவையை வழங்குகிறது.

தற்போது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ரூ.222 பிரீபெயிட் சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை தேர்வு செய்யப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த சலுகை தற்சமயம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா பலன் பெறாத வருடாந்திர வாடிக்கையாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அறிவிப்பு ஏற்கனவே வருடாந்திர சலுகையை தேர்வு செய்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பலன் கிடைக்காதவர்களுக்கு பலன் அளிக்கும் என கூறப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.222 சலுகையில்15 ஜி.பி அதிவேக டேட்டா, வாடிக்கையாளர்களின் பேஸ் பிளான் வேலிடிட்டி இருக்கும் வரை வழங்கப்படுகிறது. 

இத்துடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவையும் பெறமுடியும். தற்போதைய தகவல்களின் படி இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமேவழங்கப்படுவதாக தெரிகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here