அக்டோபர் 14 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித்பாய் ஷா பிசிசிஐயின் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2015 -16 இல்  ஜெய் ஷாவின் நிறுவனமான Temple Enterprises -இன் வருமானம் அதிசயத்தின் உச்சக்கட்டமாக  16000 மடங்கு அதிகரித்தமைக்காக 2017 ஆம் ஆண்டு சர்ச்சையில் சிக்கினார். 

2 வருடங்களுக்கு பிறகு ஜெய் ஷாவின் வாழ்வில் மற்றுமொரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது . 

ஒரு வாரத்திற்கு முன்  சில தலித் மற்றும் வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களும்  டிவிட்டரை பயன்படுத்துவதை தடை செய்தது . டிவிட்டரின் சமூக தரங்களை அதாவது விதிகளை மீறுவதாக கூறி அவர்களைத் தடை செய்தது டிவிட்டர். அவர்களில் ஒருவர் பத்திரிகையாளர் திலீப் மண்டல் (பின்பு டிவிட்டரிடம் புகார் கொடுக்கப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டது) . 

கடந்த மார்ச் மாதம் மண்டல் தனது டிவிட்டர் கணக்கில் தலித் குறித்த புத்தகம் பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த  பதிவை அவர் புத்தக எழுத்தாளரின் அனுமதி பெற்று வெளியிட்ட போதிலும் டிவிட்டர் நிர்வாகம் அந்த பதிவை விதிகளுக்கு புறம்பானது எனக் கூறி தடை செய்துள்ளது.   இதை தற்போது காரணம் காட்டி அவருக்கு புளுடிக் அளிக்க மறுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி இந்துக் கல்லூரி பேராசிரியர் ரத்தன் லால் , பழங்குடிகளுக்கான குழுவின் தலைவர் ஹன்ஸ் ராஜ்  மீனா ஆகியோரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிவிட்டருக்கு எதிராக #CasteistTwitter , (சாதிய டிவிட்டர்) #BramhanicalTwitter பிராமணர்களின் டிவிட்டர் என்று டிரெண்டானது. மேலும் தலித், ஆதிவாசி, பிற்படுத்தப்பட்ட மற்ற வகுப்பினர் ஆகியோரது டிவிட்டர் கணக்குகளை டிவிட்டர் சரிபார்த்து புளுடிக் (Bluetick – verified) கொடுப்பதில்லை என்றக் குற்றச்சாட்டையும் மக்கள் கூறினர். உயர்ஜாதி வகுப்பினருக்கு அவர்களது கணக்குகள் சரிபார்க்கப்பட்டு புளுடிக் கொடுக்கப்படுகிறது என்றும் கூறினார்கள். இதனைக் குறித்து சமுகவலைத்தளங்களில் பெரிய விவாதமே நடந்தது .

பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானவர்களை பின் தொடர்பவர்களாக (followers) கொண்டிருந்தாலும் ஏன் அவர்களது கணக்குகள் சரிபார்க்கப்படவில்லை என்றும் அதேசமயத்தில் பின்தொடர்பவர்கள் மிகக் குறைவாக இருந்தும் உயர்சாதி வகுப்பினைச் சேர்ந்தவர்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு புளுடிக் கொடுக்கப்படுகிறது என்றும் விவாதித்தார்கள்.   

சிலர் அமித்ஷாவின் மகனான ஜெய் ஷாவின் டிவிட்டர் கணக்கை சுட்டிக் காட்டினார்கள். ஜெய் ஷா பிசிசிஐ யின் செயலாளராக நியமிக்கப்பட்டதிலிருந்து நவம்பர் 4 ஆம் தேதி வரையில் அவர் எதுவும் டிவீட் செய்திருக்கவில்லை; அவரை பின் தொடர்பவர்கள் 27 பேராக இருந்தனர் அவருடைய கணக்கு தொடங்கப்பட்டதிலிருந்து அவருக்கு (சரிபார்க்கப்பட்டு)  புளுடிக் கொடுத்திருந்தது டிவிட்டர். 

அவரது கணக்குப் பற்றி பேசியதால் நவம்பர் 4 முதல் நவம்பர் 6 ஆம் தேதிக்குள் ஜெய் ஷா பின் தொடர்பவர்கள் 27 லிருந்து 10000 -மாக மாறினார்கள். அதாவது 37000 மடங்கு வளர்ச்சி . 

இந்த வளர்ச்சி எவ்வாறு நடக்கிறது . 

 8 லட்சம் பின் தொடர்பவர்களைக்  கொண்ட பிரபல தமிழ்ப்பட  இயக்குநரான பா ரஞ்சித்துக்கும் இந்த புளுடிக் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையொட்டி டிவிட்டர் பயனாளிகள் #CancelAllBlueTicksinIndia என்னும் ஹேஷ் டாகை பதிந்து டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.  அத்துடன் தங்கள் பதிவில் சாதிப் பாகுபாட்டை முன்னிறுத்தும் புளூ டிக் குறியீட்டை இந்தியாவில் உள்ள அனைத்து டிவிட்டர் கணக்கில் இருந்தும் நீக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here