டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து….: அலறும் டிரம்ப்

The channel is now "temporarily prevented from uploading new content for a 'minimum' of 7 days," the statement read.

0
62

டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து யூடியூப் நிறுவனம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சேனலை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்துள்ளது.

வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு இருந்த டிரம்பின் வீடியோவை நீக்கி, அவரது சானலுக்கு யூ-டியூப் நிறுவனமும் தற்காலிக தடை விதித்திப்பதாகத்தெரிவித்தது. அந்த வீடியோ இப்போது அகற்றப்பட்டது என்று சொன்னதுடன், அந்த வீடியோவின் விவரங்களைப் பகிரவும் யூடியூப் மறுத்துவிட்டது.

தரக்கொள்கையை மீறியதற்காக வெள்ளை மாளிகையின் சேனலில் இருந்து உள்ளடக்கத்தையும் யூடியூப் நீக்கியது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

இப்போது வரை, டிரம்பின் கணக்குகளை முடக்காத ஒரே பெரிய சமூக ஊடக தளமாக யூடியூப் இருந்தது. டிரம்பின் கணக்கை”காலவரையின்றி” பேஸ்புக் நிறுத்தியுள்ளது, டிரம்பிற்கு டிவிட்டர் முற்றிலும் தடை விதித்துள்ளது.

“கவனமாக மதிப்பாய்வு செய்தபின், வன்முறைக்கான தற்போதைய சாத்தியங்கள் அடிப்படையில், டொனால்ட் ஜே. டிரம்ப் சேனலில் பதிவேற்றப்பட்ட புதிய உள்ளடக்கத்தை அகற்றி, வன்முறையைத் தூண்டும் விதமாக எங்கள் கொள்கைகளை மீறியதற்காக இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுத்தோம்”என்று யூடியூப் செய்தித் தொடர்பாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதன் விளைவாக டிரம்ப் இனி, யூடியூப் சேனலில் புதிய வீடியோக்களை அல்லது லைவ் ஸ்ட்ரீம்களை குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு பதிவேற்ற முடியாது. இது நீட்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கின. அதன்பின்னர் டிரம்பின் டிவிட்டர் பக்கம் நிரந்தரமாகமுடக்கப்பட்டது. மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here