அஜித்தின் விஸ்வாசம் இந்த வருடத்தின் முதல் மெகா ஹிட் படம். அப்படம் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், ‘விஸ்வாசம்’ ஹேஷ்டேக்,  2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டது என டிவிட்டர் அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் பல்வேறு விஷயங்கள் ட்ரெண்ட் செய்யப்படுகின்றன. யாரேனும் ஒரு பிரபலத்திற்கு பிறந்த நாள், ஏதேனும் ஒரு முக்கிய நாள், புதிய திரைப்படம்,புதிய பாடல் வெளியீடு என நாள்தோறும் ஏதேனும் ஒரு விஷயம் ட்ரெண்டாகிக் கொண்டே இருக்கும். குறிப்பாக டிவிட்டரின் முக்கிய அம்சம் ட்ரெண்டிங் எனக் கூறலாம்.

இப்படி ட்ரெண்டாகும் விஷயங்களில் அடிக்கடி பார்க்கக் கூடிய ஒரு ட்ரெண்டிங்காக அஜித் பெயர் இருக்கும். அவரது படம் அல்லது பாடல் என ஏதேனும் ஒன்றை அவரது ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரெண்டாக்கி வைத்திருப்பார்கள். மற்ற நடிகர்கள் படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் அன்று கூட அஜித் தொடர்பான ட்ரெண்டிங் அந்த ஹேஷ்டேக்குகளை மழுங்கடிக்துவிடும். அந்த அளவிற்கு டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள்மிகப் பலமாகவே ஆதிக்கம்செலுத்தி வருகிறார்கள்.

அதை நிரூபிக்கும் வகையில் டிவிட்டர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்றைய தினம் ஹேக்டேக் தினம் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் 2019 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 5 ஹேஷ்டேக்குகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அஜித் நடித்த திரைப்படமான விஸ்வாசம்(#Viswasam ) முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் 2019 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் (#LokSabhaElections2019 ) இருக்கிறது. மூன்றாம் இடத்தை கிரிக்கெட் உலகக்கோப்பையும்(#CWC19 ), நான்கம் இடத்தை மஹர்சியும் (#Maharshi ) பிடித்துள்ளது. 5 ஆம் இடத்தில் புதிய முகப்பு புகைப்படம் (#NewProfilePic ) உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here